|
வறியார்க்கொன் றீவதே ஈ.கைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
|
பொருள்::
|
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈ.கைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ
ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
|
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈ.தலே நன்று.
|
பொருள்::
|
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும்.
கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும்
பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். |
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈ.தல்
குலனுடையான் கண்ணே யுள.
|
பொருள்::
|
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈ.வது உயர்ந்த
குடிப்பிறந்தவரின் பண்பாகும்.
|
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.
|
பொருள்:: |
ஈ.தல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு
இன்புறும் வரையில்இ அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
|
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
|
பொருள்:: |
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும்
ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும். |
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
|
பொருள்:: |
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவேஇ தான் தேடிய
பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
|
| |
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது. |
|
பொருள்::
|
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. |
ஈ.த்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
|
பொருள்:: |
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு
இரக்கமற்றோர்இ பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? |
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.
|
பொருள்:: |
பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்றுஇ குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது
என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது. |
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈ.த லியையாக் கடை.
|
பொருள்:: |
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது. |
|