கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

புறங்கூறாமை.


 Users online ::

         

                        அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம் கூறான்  என்றல் இனிது.

பொருள்::

 ஒருவன் அறன் என்பதையே அறியாதவானாக அறம் அல்லாத காரியங்களைச் செய்கிறவனாக இருந்தால் அவன் கோள் சொல்ல மாட்டான் என்பது சிறப்புடையது.


                           அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே புறன் அழிஇப் பொய்த்துநகை.

பொருள்::

 (அரத்தை அற்ந்தவனாக இருந்தும் அறிந்தே தவறு செய்கிறவனானாலும்.) அறத்தினின்றும் நழுவி அறமில்லாதவற்றாஇச் செய்வதை ஒருவனைப்பற்றிப் பொய்யான கோள்களைச் சொல்லி மகிழ்வது கொடியது.


                        புறன் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின்சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்.

 

பொருள்::

 (அப்படிக் கோள் சொன்னால்தான் உயி வாழலாம் என்ற நிலமை ஏற்பட்டால்) கோள் சொல்லிப் பொய்யனாக உயிர் வாழ்வதை விட செத்துப்போவது அறநூல்கள் சொல்லுகிற புண்ணியத்தையாவது உண்டாக்கும்.


                       கண்நின்று கண் அறச்சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின் நோக்காச் சொல்.

 

பொருள்::

   (கோள் சொல்லுவது அப்போதைக்கு நணமையுண்டாக்குவது போலத் தோன்றினாலும் பின்னால் சொல்லுகிறவனுக்கே கேடுண்டாகும்) ஒருவனுக்கு முன்னால் நின்று, அவனைத் தட்சிண்யமில்லாமல் பேசிவிட்டாலும் குற்றமில்லை. ஆனால் ஒருவன் முன்னால் இல்லாதபோது பின்னால் வரக்கூடிய தீமைகளை எண்ணிப்பார்க்காமல் அவன் மீது கோள் சொல்லக்கூடாது.


                         அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப்படும்.

 

பொருள்::

 கோள் சொல்லுகிறது சொல்லுபவனுக்கே தீமைகளை உண்டாக்கும்.ஏன் எனில்) நல்லது சொல்லும் எண்ணமுள்ளவன் அல்லனென்பதைக் கோள் சொல்லுகின்ற அர்பத்தனமே கோளைக்காதால் கேட்கிறவனுக்கு காட்டிவிடும்.


                      பிறான் வழி கூறுவாந்தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்.

 

பொருள்::

(யாரிடத்தில் கோள் சொல்லுகிறானோ அவனே இவனைச் சந்தேகிப்பான்) இன்னொருவன் மேல் பழிசுமத்தக் கோள் சொல்லுகிறவன் தான் யாரிடத்தில் கோள் சொல்லுகிறானோ அவனே தன்னை கோள் சொல்லும் குற்ற முள்ளவனாகக் அகுத இடமிருக்கிறதே என்பதே தெரிந்துகொண்டு  பேச வேண்டும்.

              
  பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர்.

 

பொருள்::

(கோள் சொல்லுகிறவர்கள்) பிளவு உண்டாக்கும் படி புனைந்து பேசி, மனமொத்ட்க்ஹ நன்பர்களையும் பிரித்து வைத்துவிடுவார்கல்ள். மகிழ்ச்சி உண்டாக்கும் படி நல்ல வார்த்தைகளைச் சொல்லி நட்புண்டாக்குவது அவர்களுக்குத் தெரியாது.


                         துன்னியார் குற்றமும் தூர்றும் மரபினார் என்னைக்கொல் ஏதிலார் மாட்டு.

 

பொருள்::

நெருங்கிய நண்பர்களுக்கிடையிலும் குற்றம் கூறித் தூற்றிப் பேசிப் பகமை உண்டாக்குகிறது இனமாகிய இவர்கள் ஏற்கனவே பகமை உள்ளவ்ர்களுக்கிடையில் என்ன செய்யமாட்டார்கள்.


                        அறன்நோக்கி ஆற்றும்கொல் வயம்புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.

 

பொருள்::

(இப்படிப்படவர்கள் இந்த உலகம் ஏன் சுமந்துகொண்டிருக்கிறாது?) ஒருவன் இல்லாத சமயம் பார்த்து அவனைப்பற்றி பொய்களைச் சொல்லிக் கோள் மூட்டுகிறவனுடைய பாரத்தையும் இந்தப் பூமி சுமந்துகொண்டிருப்பது தன் கடமையைக் கருதியே.


                         ஏதிலார்குற்றம்போல்  தம்குற்றம் காண்கிற்பின் தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு?

 

பொருள்::

கோள் சொல்லுகிறவனானாலும் அதற்கு காது கொடுக்கிறவனானாலும்) பிறரிடம் குற்றம் காண்பதைப்போல் தன் குற்றத்தையும் காண்பானாகில் மனிதருக்கு கோள் சொல்லுவதனால் உண்டாகிற தீமைகள் இருக்குமா? இருக்கமாட்டா.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com