கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

புலால்மருத்தல்.


 Users online ::

         

                        தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.

பொருள்::

தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.


                           பொருளாட்சி போற்றாதார்க் கில்லைஅருளாட்சி ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.

பொருள்::

 பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.


                         படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காதொன்றன் உடல்சுவையுண்டார் மனம்.

 

பொருள்::

 படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும்இ ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும்இ அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.


                       அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல்.

 

பொருள்::

 கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.


                         உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு.

 

பொருள்::

உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால்இ பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.


                      தினற்பொருட்டால்கொல்லாதுலகெனின்யாரும்விலைப்பொருட்டால்ஊன்றருவா ரில்.

 

பொருள்::

 புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின்இ புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.

              
  உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின்.

 

பொருள்::

 புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.


                         செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

 

பொருள்::

மாசற்ற மதியுடையோர்இ ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.


                          அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.

 

பொருள்::

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.


                          கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.

 

பொருள்::

புலால் உண்ணாதவர்களையும்இ அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com