கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

புகழ்.


 Users online ::

         

                        ஈ.த லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு.

பொருள்::

கொடைத் தன்மையும்இ குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.


                           உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்.

பொருள்::

 போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.


                         ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில்.

 

பொருள்::

 ஒப்பற்றதாகவும்இ அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
 


                       நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு.

 

பொருள்::

 இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்துஇ அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.


                         நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது

 

பொருள்::

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும்இ தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.


                      தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று

 

பொருள்::

 எந்தத் துறையில் ஈ.டுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.

              
  புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்.

 

பொருள்::

 உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள்இ அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?


                         வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.

 

பொருள்::

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால்இ அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.


                          வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

 

பொருள்::

 புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால்இ இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

                          வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.

 

பொருள்::

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும்இ புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com