கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

பொறாமையுடமை.


 Users online ::

         

                        அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை.

பொருள்::

 குளிதோண்டுவதற்கு தன்னையே வெட்டுகிற மனிதரைத் தானெ சுமந்துகொண்டிருக்கிற நிலம்போல, ஒருவன் தன்னை அவமதித்தவர்களிடம்பொறுமை காட்டி மன்னித்து, அவர்களுக்கு உதவியும் தானே செய்வது, மிக உயர்ந்த பொஐயுடமைக் குணம்.


                           பொறுத்தல் இறப்பினை என்று அதனை மறத்தல் அதனினும் நன்று.

பொருள்::

 பொறுத்தல் என்பது ஒருவன் செய்துவிட்ட குற்றத்தைப் பொறுத்துக்கொள்வது. பொறுத்து மன்னித்து விடுவதைவிட அக்குற்றத்தை மறந்துவிடுவது, இன்னும் சிறந்த பொறுமையுடமையாகும்.


                        இன்மையுள் இனமை விருந்து ஒரால் வன்மையும் வனமை மடவார்ப் பொறை.

 

பொருள்::

 (முற்றிலும் மறந்துவிடுவது கடினம் மன்னிப்பதற்கு மனப் பெருமை வேண்டும்) மனப் பெருமை இல்லமையிலும் இல்லாமை, விருந்தினரை உபசரிக்காமல் விட்டுவிடுதல்.மனப்பெருமயின் வல்லமையிலும் வல்லமை.அறிவில்லதவர்கள் செய்துவிட்ட திமைகளை பொறுத்து மன்னித்துவிடுதல்.


                       நிறை உடமை நீங்காமைவேண்டின் பொறை உடமை போற்றி ஒழுகப்படும்.

 

பொருள்::

  நிறைகுணம் உள்ளவன் என்ற பெருமை நீங்காமல் இருக்க வேண்டுமானால். பொறுமையை பாதுகாத்து அதற்கிணங்க நடந்துகொள்ள வேண்டும்.


                         ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொற்த்தாரப் பொன்போல் பொதிந்து.

 

பொருள்::

 தீங்கிற்கு தீங்கு திருப்பி செய்துவிடிகிறவனைக் குறிப்பிடத் தகுந்த ஒரு மனிதனாக யாரும் மதிக்க மாட்டார்கள். ஆனால் தீங்கு செய்தவனையும் மன்னித்து விடுகிறவனை.மிகவும் குறிப்பிடத்தக்கவனாக மதித்து அவனுடைய பெருமைக்குணத்தை எல்லோரும் தம்முடைய மனதில் போற்றி வைப்பார்கள்.


                      ஒறுத்தார்க்கு ஒரு நாளைஇன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.

 

பொருள்::

 (ஆகையினால்) தீங்குக்கு தீங்கு உடனே திருப்பிச் செய்து தண்டித்துவிடுதல் அப்போதைக்குத்தான் இன்பம் உண்டு. ஆனால் பொறுத்து மன்னித்துவிடுதல் சாகும்வரை பிறப்பு அதைப் புகழ்ந்து பேசும் இன்பம் உண்டு.

              
  திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்துஅறன் அல்ல செய்யாமை நன்று.

 

பொருள்::

மன்னிக்க முடியாத குற்றத்தை தனக்குப் பிறன் செய்து உடனே தண்டித்து விட்டாலும் குற்றமில்லை. ஆனால் உடனே திருப்பித் தண்டிக்க தைரியம் இல்லாமல் சும்ம இருந்துவிட்டு அதை மனதி வத்து நொந்துகொண்டே இருந்து அவன் ஏமாந்த சமயத்தி அதர்மமான முறையில் பழி வாங்காமல் இருப்பது நல்லது.


                         மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்தகுதியான் வென்று விடல்.

 

பொருள்::

(பின் என் செய்வார்கள் என்றால்) கோப மிகுதியால் குற்றம் செய்துவிட்டவர்களை பொறுமையுள்ளவர்கள் தாமாகவே அவர்களுக்கு உதவிகள் செய்து தம்முடைய பெருங்குணத்தால் அவர்களை வசப்படுத்திவிடுவார்கள்.


                        துறந்தாரின் தூய்மைஉடையர் இறந்தார்வாய் இன்னாச் சொல் நோக்கிற்பவர்.

 

பொருள்::

கோபத்தால் ஒருவன் முறைதவறிப் பேசுகின்ற துன்பந்தரும் வசைகளையும் கேட்டுப் பொறுத்துக்கொள்ளுகிறவர்கள் துறவிகளைக்காட்டிலும் சுத்தமான சகிப்புள்லவர்கள்.

                          உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின்பின்.

 

பொருள்::

 (அதனால்) உணவு முதலிய சுகங்களைத் திறந்து பல துன்பங்களை சகித்துக்கொள்ளுகிற பெரியோர்களாகிய துறவிகளும் கூடப் பிறர் சொல்லும் வசை மொழிகளால் உண்டாகும் துன்பங்களைச் சகித்துக்கொள்கிறவர்களுக்கு மட்டமானவர்கள்தாம்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com