|
பிறன் பொருளாள் பொட்டு ஒழுகும் பேதைமை
ஞாலத்து அறம் பொருள்கண்டார் கண் இல்.
|
பொருள்::
|
இன்னொருவனுக்கு உரிமையான அவனுடைய மனைவியின் மேல்
காம இச்சைகொண்டு அலைகிற மூடத்தனம் இல்லறத்தின் அர்த்தத்தை அறிந்தவர்களிடம்
இருக்காது.
|
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.
|
பொருள்::
|
இல்லற ஒழுக்கத்தில் கடை கெட்டவர்கள்
எல்லாரிலும் இன்னொருவனுடைய மனைவியின் மேல்
காம ஆசை கொண்டு அவனுடைய வாசலுக்குப் போகிற
மூடன் வேறு யாருமில்லை. |
விள்ந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவர்.
|
பொருள்::
|
(அதிலும்) தன்னை மிகவும் நம்பியிருந்தவனுடைய மனைவியின் காம இன்பத்தை விரும்பியலைகிற
ஒருவன்செத்த பிணத்துக்கு ஒப்பான்.
|
எனைத்துணையார் ஆயினும்என்னாம் துணைத் திணையும்தேரான் பிறன்இல் புகள்.
|
பொருள்:: |
(யாரானாலும்) சிறிதேனும் எண்ணிப்பார்க்காமல் இன்னொருவனுடைய மனவியின் மேல்
காமங்கொண்டு அவனுடைய வீட்டுக்குள் நுளைகிறவன்வேறு என்ன சிறப்புடையவனானாலும் என்ன
பயன்?
|
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.
|
பொருள்:: |
(செல்வத்தாலும் செல்வாக்காலும் இந்தக்
குற்ரத்தை எளிதாக செய்துவிடலாம்) ஆனால்
அதன் விளைவு எளிதாக கிடைக்கிறதென்று
இலேசாக மதித்துப் பிறனுடைய
மனவியிடத்துக்கொண்ட காம ஆசையினால் நெறி
கடந்து நடந்துகொள்ளுகிறவன்.என்றும்
நிலைக்கக் கூடிய பழியை அடைவான். |
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவா ஆம் இல் இறப்பான்கண்.
|
பொருள்:: |
(பிறன் மனைவியின்
மேல் காமங்கொள்வதால்) இன்னொருவனுடைய மனைவியிடத்தில் காமத் தொடர்பு நாடுகினறவனுக்கு
அதனாலுண்டாகும் பகைமையின் வஞ்சினமும்,குற்றத்தின் பாவமும்,கண்டுகொண்டால் என்னவாகுமோ
என்ற அச்சமும், பிறர் பேசும் பழிச்சொல்லும் ஆகிய நான்குமெப்போதும் இருந்துகொண்டே
இருக்கும்.
|
| |
அறன் இயலான் இல்வாழ்வானென்பான்பிறன் இயலாள் பெண்மை நயவா தவன். |
|
பொருள்::
|
(உலகத்தில் இல்லறம் ஒழுங்காக
நடைபெறுதற்குப் பிறனில் விளையாமைதான்
பிரதானம் ஆதலால்) இல்லற முறைப்படி குடும்ப
வாழ்க்கை நடத்துகிறவன் யாரென்றால்,
இன்னொருவனுடய இல்லறத்துக்காக
வாழ்க்கைப்பட்டிருக்கின்ற பெண்ணின்காம
இன்பத்தை விரும்பாதவன். |
பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு அறன்ஒன்றேஆன்ற ஒழுக்கு.
|
பொருள்:: |
வேறொருவனுடைய மனைவியை
காமக்குறியோடு கண்ணெடுத்தும் பாக்காத மன உறுதியோடு யோக்கியர்கள் தங்களுடைய
தர்மமாகாக்கொள்வார்கள். அது மட்டுமல்ல அவர்களுடைய ஒழுக்கமே அதுதான்.
|
நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில் பிறற்குஉரியாள் தோள் தோயாதார்.
|
பொருள்:: |
(அப்படிப்பட்ட மனஉறுதி உள்ளவர்கள்
உலகத்தில் வெகுசிலரே. அதனால்
இந்தக்குற்றம் உலகத்தில்
அச்சமுண்டாக்கத்தக்கதாக
இருக்கிறது.அப்படி) அச்சந்தரக்கூடியதாக
உள்ள இந்த உலகத்தில் மெச்சத் தகுந்தவர்கள்
யாரென்றால்.இன்னொருவனுடைய மனைவியைக் காம
ஆசையினால் தீண்டாதவர்களே. |
அறன் வரயான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
|
பொருள்:: |
(ஆதலால்) இல்லற நெறியின்
வரம்புக்கு மீறிய வேறூ குற்றங்களைச் செய்துவிட்டாலும் இன்னொருவனுடைய
வரம்பிற்கு உட்பட்டவளான அவன் மனைவியுடன் காம இன்பத்தை விரும்பாதிருக்கும் ஒரு நல்ல
காரியமே நல்ல ஆறமாகும்.
|
|