|
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.
|
பொருள்::
|
ஒரு சபையில் உள்ள பல
பேருக்குகோபம் உண்டாகும் படி பயனற்ற வார்த்தைகளை பேசுகின்றவன். எல்லாராலும்
இழக்கப்பட்டு அவமானப்படுவான்.
|
பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது.
|
பொருள்::
|
(அவமானம்
மட்டுமல்ல) பலபேருக்கும் முன்னால், வீண்
வார்த்தைகலை பேசுவது, நண்பர்களிடத்தில்
விரும்பத்தகாத குற்றங்களைச் செய்வதைவிடத்
தீமைகளை உண்டாக்கக்கூடியது. |
நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல பாரித்து உரைக்கும் உரை.
|
பொருள்::
|
(ஏனெனில் அவன்மீது
எல்லாருக்கும் வெறுப்புண்டாகும்) ஒரு சபையில் பிறருக்கு பாரமாக அலுப்புண்டாக்கும்
படி வீண் வார்த்தைகளை அதிகமாக பேசுகின்ற பேச்சு அவன் பயனற்றவன் என்பதை
வெளியாக்கிவிடும்.
|
நயன் சாரா நண்மையின்நீங்கும் பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லாரகத்து.
|
பொருள்:: |
(பிறருக்கு
அலுப்புண்டாக்குவதோடு அவனுக்கும் தீமை உண்டாக்கும்) பலபேர் கூடிய சபையில்
பயனற்றதும் தகுதியற்றதுமான பேச்சை பேசுவது கேட்கிறவர்களுடைய இன்பத்தை கெடுத்துப்
பேசுகின்றவனுக்கு வரக்கூடியநண்மைகளையும் தடுத்துவிடும்.
|
சீர்மை சிறப்போடு நீங்கும்பயன் இல நீர்மை உடையார் சொலின்.
|
பொருள்:: |
(சாதரண
மனிதர்களுக்கு மட்டுமல்ல கல்வி கேள்விகள்
நிறைந்தது) மேலான நிலமையில்
உள்ளவர்களானாலும் பலபேர் கூடிய சபையில்
அவர்கள் வீண் வார்த்தைகளைப்
பேசிவிடுவார்களானால் அப்போதே அவர்கள்
சீரும் சிறப்பும் அவர்களை விட்டு
நீங்கிவிடும். |
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்.
|
பொருள்:: |
(சபையில் பயனற்ற சொற்களையே திருப்பித்
திருப்பிச் சொல்லுகிஅவனை) பயனற்ற பெச்சையே திருப்பித் த்ருப்பிப் பேசுகின்றவனை
மனித்னென்றா சொல்ல முடியும்? மனிதப் பதர் என்றுதான் சொல்ல முடியும்.
|
| |
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று. |
|
பொருள்::
|
(அதனால்) அறிவொழுக்கங்களாற் சிறந்தவர்கள்
பிறரைக் கண்டிக்க அன்பில்லாத
வார்த்தைகளைச் சொன்னாலும் சொல்லுவார்கள்.
ஆனால் வீண் வார்த்தைகளை பேசமாட்டார்கள். |
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும் பயன் இல்லாத சொல்.
|
பொருள்:: |
(அறிவொழுக்கதிற் சிறந்திருத்தலோடு
பிறவிப் பயனை அற்ந்தவர் ஆராய்ந்து பேசுவார்) அருமையான மனிதப் பிறவியினால்
அடயக்கூடிய பயன்களை ஆரயக்கூடிய அறியுடையவர்கள் பிறருக்கு மிகுந்த நண்மையை
உண்டாக்கக்கூடிய பேச்சையன்றி வேற எதையும் பேசமாட்டார்கள்.
|
பொருள்
தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்
தீர்ந்த மாசு அறு காட்சியவர்.
|
பொருள்:: |
அறிவொழுக்கத்தோடு பிறவிப் பயனையும்
அறிந்து அதன் மேலும் ஆசாபாச மயக்கங்களை
ஒழித்தவர்கள்) உலக ஆசைகளின் மயக்கங்களை
ஒழித்துவிட்ட மெய்யறிவுடையவர்கள்
எப்போதும் எங்கே பேசினாலும் பயனில்லாத
வார்த்தைகளைமறந்தும் பேசிவிட மாட்டார்கள். |
சொல்லுக சொல்லின் பயன்உடைய சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்.
|
பொருள்:: |
(ஆகையினால்)
பயனுள்ள வார்த்தைகளையே ஆரய்ந்து பொறுக்கியெடுத்துப் பேச வேண்டும் வீண்வார்த்தைகளை
ஆரய்ந்து பொறுக்கியெடுத்து விலக்க வேண்டும
|
|