கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

அவா அறுத்தல்.


 Users online ::

         

                        அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து.

பொருள்::

ஆசையைஇ எல்லா உயிர்களிடமும்இ எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.


                         வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்.

பொருள்::

 விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலைஇ ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.


                         வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈ.ண்டில்லை ஆண்டும் அஃதொப்ப தில்.

 

பொருள்::

 தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.


                       தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.

 

பொருள்::

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.


                         அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார் அற்றாக அற்ற திலர்.

 

பொருள்::

ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர்இ தூய துறவியாக மாட்டார்.


                      அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா.

 

பொருள்::

 ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவேஇ ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

              
  அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்.

 

பொருள்::

கெடாமல் வாழ்வதற்குரிய நிலைஇ ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்குஇ அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.


                         அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.

 

பொருள்::

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால்இ அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.


                          இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின்.

 

பொருள்::

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.


                          ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.

 

பொருள்::

இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலைஇ நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.


  Back<<                                                                                                                                                                   www.nakarmanal.com