|
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉக்கு ஆக்கம் எவனோ
உயிர்க்கு.
|
பொருள்::
|
தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது நிச்சயம். செல்வமும்
வராமல். ஆதலால் தர்மத்தை காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது என்ன
எருக்கிறது?
|
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கு இல்லை
கேடு.
|
பொருள்::
|
தர்மங்களை செய்வதுபோல நன்மை தரக்கூடியதும்.இல்லை தர்மங்களை
செய்யாமல் மறந்துவிடுவது போலத் தீமை தரக்கூடியதும் இல்லை. |
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல்.
|
பொருள்::
|
அதனால் முடிந்தவரையிலும் தர்ம காரியங்களைச் சமயம்
வாய்த்தபோதெல்லாம் மறக்காமல் செய்ய வேண்டும்.
|
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற.
|
பொருள்:: |
மனத்தில் குற்றமான நோக்கமில்லாமல் செய்கிற நல்ல காரியந்தான்
அறம் என்பது. ஒரு சுயநல நோக்கத்தைக் கொண்டு எந்தத் தர்மம் செய்தாலும் அது வெறும்
ஆடம்பரந்தான் அறமாகாது. |
அழுக்காறு அவா வெகுளி இன்னாச் செய்தல் நான்கும் இழுக்கா இயன்றது
அறம்.
|
பொருள்:: |
பொறாமை, ஆசை, கோபம் கடுஞ்சொல் ஆகிய நானகையும் நீக்கிவிட்டுச்
செய்கின்ற எல்லாக் காரியங்களும் அறங்காளேயாகும். |
அன்று அறிவாம் என்னாதுஅறம் செய்கமற்று அது பொன்றுங்கால்
பொன்றாத்துணை.
|
பொருள்:: |
(அறம் செய்வதை ஒத்திப் போடக்கூடாது) பின்னால்
பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு வைக்க கூடாது உடனே செய்ய வேண்டும்
அப்படிச்செய்ததன் பலன் உடல் இறந்த பிறகும் உயிருக்கு உதவி செய்ய துணையாகும்.
|
| |
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை |
|
பொருள்::
|
பல்லக்கைச் சுமக்கிற மனிதனையும், பல்லகில்
இருந்து சவாரி செய்கிற மனிதனையும்கவனித்து
ஆலோசித்தால் அறம் செய்யாவிட்டால் என்ன
துன்பம் என்பதையும், அறம் செய்தால்
என்ன இன்பம் என்பதையும் யாரு சொல்லாமலேயே
அறிந்து கொள்ளலாம். |
வீழ்நாள் படா அமை நன்று ஆற்றின் அ/துஒருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல்.
|
பொருள்:: |
(பல்லக்கில் சவாரி செய்கிறசுகம்
சொற்ப அறம் செய்ததால் வந்தது. மிகுந்த அறம் செய்கிறவர்கள் அதைவிட மேலான இன்பங்களை
அடையலாம்) சாகிற வரையிலும் தர்மங்களையே செய்கிறவர்கள் பிறவாதிருக்கிற
பேரின்பத்திஅயும் பெறலாம். |
அறத்தான் வருவதே இன்பம் மற்று
எல்லாம் புறத்து புகழும் இல.
|
பொருள்:: |
(பேரின்பத்தைக் கருதாவிட்டாலும்)
அறங்களைச் செய்து அதனால் அடைகிற மகிழ்ச்சிதான் நல்ல இன்பம். அது புகழும் தரும் மற்ற
இன்பங்களெல்லாம் அப்படிப்பட்ட நல்லவையல்ல. அவற்றால் புகளும் கிடைக்காது. |
செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு
உயற்பால ஓரும் பழி.
|
பொருள்:: |
(ஆகையினால்) ஒருவன் தன் வாழ்நாளில்
செய்ய வேண்டுமென்பது அறச்செயல்தான். செய்யாமல் விலக்கிவிட வேண்டும் என்பதுபழி பாவச்
செயல்களேயாம். |
|