|
ஒழுக்கு ஆறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.
|
பொருள்::
|
பிறருடைய
நல்வாழ்வைக் கண்டு பொறாமைப்படாமலிருக்கிற குணத்தை ஒவ்வொருவனும் தன்னுடைய வாழ்க்கை
நெறி முறையாக மனத்தில் வைக்க வேண்டும்.
|
விழுப் பேற்றின் அ/து ஒப்பதுஇல்லை
யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.
|
பொருள்::
|
யாருடைய நல்வாழ்வைக்கண்டும் பொறாமை
கொள்ளாத மனப்ப்பாண்மை அடைந்துவிட்டால்.
விரும்பத்தக்க மேலான செல்வங்களும் அதற்கு
இணையாவது வேறில்லை. |
அறம் ஆக்க வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் பேணா அழுக்கறுப்பான்.
|
பொருள்::
|
(பொறாமையினால்தான்)
பல பாவச்செயல்களைச் செய்து தர்ம பலம் குறைகிறது, பிறருடைய நல்வாழ்வைக்கண்டு
பொறாமைப் பட்டுக்கொண்டிருப்பவன் தர்ம பலத்தை இழந்துவிடுகிறான்.
|
அழுக்காற்றின் அல்லவைசெய்யார் இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு
அறிந்து.
|
பொருள்:: |
(தர்ம பலத்தை
மதிக்கிறவர்கள்) பொறாமைப்பட்டி அறமல்லாத காரியங்களைச் செய்துவிட மாட்டார்கள்.
ஏனெனில் பொறாமைக் குற்றத்தால் விளையக்கூடிய தீமைகளை அவர்கள் அறிவார்கள்.
|
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் வழுக்கியும் கேடு
ஈன்பது.
|
பொருள்:: |
(வேறு ஒரு குற்றம் செய்யாவிட்டாலும்
பொறாமைக்குணமே ஒருவனைக் கெடுத்துவிடும்)
பொறாச்மைக்குணம் உள்ளவர்களுக்கு
கேடுண்டாக்க அதுவே போதும். பகைவர்களால்
க்ர்டுக்க முடியாதவனையும் அது
கெடுத்துவிடும். |
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக்
கெடும்.
|
பொருள்:: |
(பொறாமையுள்ளவன் ஒருவருக்கொருவர்
தனங்குடுப்பதை கண்டால் கூட பொறுக்க மாட்டார்கள் அதனால்) தானங்கொடுப்பதைக்கூடக்
கண்டு பொறாமைபடுகிறவனுடைய குடும்பம் உண்வும் உடையும் அற்றுத் தவிக்கும்படியான
தரித்திரத்தை அடைந்துவிடும்.
|
| |
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவன் தவ்வையைக் காட்டிவிடும். |
|
பொருள்::
|
(அவன்
செல்வமுடையவனாக இருந்தாலும் அது போய்
வறுமை வந்துவிடும் எப்படியெனில்)
பொறாமைப்படுகிறவனிடத்தில்
வெறுப்புக்கொண்டு சீதேவியானவள் தன்
அக்காளாகிய மூதேவியிடம் அவனக்காட்டிவிட்டு
அவன விட்டுப் போய்விடும். |
அழுக்காறு என ஒரு பாவிதிருச் செற்று தீயுழி உய்த்துவிடும்.
|
பொருள்:: |
(அதனால்)
பொறாமை என்ற பாவம் செல்வத்தையும் அழித்து பல தீமைகளிலும் தள்ளிவிடும்.
|
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்.
|
பொருள்:: |
(ஆனல்
பொறாமைக்குணம் உள்ளவர்கள் உலகத்தில்
செல்வத்துடன் இருப்பதைப் பார்க்கிறோம்
என்பதென்றால்) பொறாமை மனமுள்லவன்
செல்வமுள்ளவனாக இருப்பதும், செம்மையான
மனமுள்ளவன் ஏழையாக ஏழையாக இருப்பதும்
சிந்திக்க வேண்டிய விஷயங்கள்தான். |
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அ/து
இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.
|
பொருள்:: |
(எப்படியெல்லாம்
சிந்தித்துப்பார்த்தாலும்) பொறாமையினால் செல்வம் பெருகினவர்களும் இல்லை பொறாமை
இல்லாமல் செல்வப் பெருக்கு இல்லாது போனவர்களும், இல்லை என்பது மட்டும் நிச்சயமாகத்
தெரிகிறது. அதனால் பொறாமையுள்ளவனிடத்தில் செல்வமிருப்பதற்க்கும் பொறாமை
இல்லாதவனிடத்தில் வறுமை இருப்பதற்கும் வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.
|
|