கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

அடக்க முடமை.


 Users online ::

         

                        அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும்.

பொருள்::

அடக்கமுடமை, என்ற நற்குணம் ஒருவனுக்கு யாரும் வணங்கும் படியான தெய்வத்தன்மையை உண்டாக்கும். அடங்காமை என்ற கெட்ட குணம் ஒருவனை அவன் இருப்பதைக்கூட யாரும் அறிய முடியாத அந்தகாரமான இருளில் தள்ளிவிடும்.


                           காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.

பொருள்::

 (அதனால்) அடக்கமுடமை என்னும் குணத்தைச் செல்வமாக பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு அதைவிட வல்லமை தருவது வேறில்லை.


                        செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.

 

பொருள்::

 (அடக்கமுடமை என்பது ஒன்றுமறியாதவனாக அடங்கியிருப்பதன்று) கற்கவேண்டியதைக் கற்று அறியவேண்டியதை அறிந்து அக்கல்வியறிவின் நெற்றியில் அடக்கமுள்ளவனாக இருந்தால், அந்த அடக்க எவ்வளவு மிகுந்திருக்கிறதோ அவ்வளவுக்கு சிறப்புண்டாகும்.


                       நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையிலும் மாணப்பெரிது.

 

பொருள்::

 (அடங்கியிருப்பதென்றால்)தன்னுடைய கொள்கையை விட்டு விடாமல் பிறரிடம்பணிவாகப் பேசி அடங்கி நடந்து கொள்ளுகிறவனுடைய புகள் மலையைவிட  மிகப் பெரிதான தோற்றமுண்டாகும்.


                         எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.

 

பொருள்::

 (அந்த அடக்கம் செல்வமுடயவர்களிடமும் இருந்தால்) பிறரிடத்தில் பணிவாக அடங்கிநடப்பது எல்லாருக்கும் நல்லதுதான். ஆனாலும் செல்வமுள்ளவர்களிடத்தில். அந்தப்பணிவான அடக்கம் அமையுமானால், அது செல்வத்தோடு செல்வம் சேர்த்து போலாகும


                      ஒருமையுள், ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து.

 

பொருள்::

 (தம்முடைய ஐந்து புலன்களிலும் அடக்கமுடையவர்களுக்காகைருப்பதே சிறந்த அடக்கமுடமையாகும்.) ஆமையானது தன்னுடைய நான்கு கால்கள், தலைஆகிய ஐந்தையும் தன் இசைப்படி தன் ஓட்டுக்குள் அடக்கிகொள்வதுபோல் மனிதன் தன்  ஐந்து ஆசைகளையும் ஒரு பிறவியில் அடக்கியாள முடியுமானால் அது பின்வரும் ஏழுபிறவிகளுக்கும் பாதுகாப்பாகும்.

              
  யா காவார் ஆயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.

 

பொருள்::

 (ஐந்து புலன்களில் மற்ற) எதை அடக்கி விட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும். நாக்கை அடக்கி பேசாவிட்டால் சொல் குற்றம் ஏற்ப்படுத்தி துன்பப்படவேண்டும்.


                         ஒன்றானு தீச்சொற் பொருட் பயன் உண்டாயின் நன்று ஆகவது ஆகிவிடும்.

 

பொருள்::

(ஏனென்றால்) பேசுவது ஒரு சொல்லானாலும் கெட்ட அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதாக இருந்துவிட்டால் காரியமும் கெட்டு அடக்கமுடமையும் கெட்டுப்போகும்.


                         தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.

 

பொருள்::

 (சொல் குற்றம் ஒருவரை புண்படுத்துவிடலாம். அப்படியானால்) தீயினால் சுடப்பட்டு உண்டான புண்,  வெளியே தளிம்பு நிலைத்து விட்டாலும் உள்ளே அறிப்போகும், ஆனால் வாயினால் சுடப்பட்டு உண்டான புண் வெளியே தெரியாவிட்டாலும் உள்ளத்தில் ஆறாமல் இருந்துகொண்டே  துன்பமுண்டாகும்.

                          கதம் காத்துகற்றுஅடங்கல்  ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்தது.

 

பொருள்::

(நாக்கு பதற்றத்துக்குக் காரணம் கோபந்தான்; அதனால்) கோபத்தை அடக்கப் பேச்சில் நாவடக்கமுடயவனாக இருந்தால் அப்படிட்ப்பட்டவனுடைய நலத்தை அறக்கடவுள் தானாகவே தன் கடமையாற் காக்கும்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com