Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Contact

 

   Users online ::
 

 

சரஸ்வதி பூஜை-சகலகலாவல்லிமாலை


சகலகலாவல்லிமாலை

வெண்தாமரைக்கு அன்றி ன்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!



நாடும்சொற்சுவைபொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பயில் பத்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!




அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ? உளம்கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!



தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பத்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே




பஞ்சு அப்பு, ஆதம்தரும், செய்ய, பொற்பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!!




பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் றைந்தாய்! சகலகலாவல்லியே!




பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ண்ம்
காட்டும்வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!




சொற்விற்பன்னமும், அவதானமும், கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப்பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!




சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!




மண்கண்ட,வெண்குடைக்கீழாக, மேற்பட்ட மன்னரும், என்
பண்கண்ட அளவில், பயச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்டதெய்வம் பல்கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்
கண்கண்டதெய்வம் உளதோ? சகலகலாவல்லியே


 

                           சரஸ்வதி அந்தாதி


ஆய கலைகள்அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்
இருப்பாள் இங்கு வாராதிடர்





படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் துடியிடையும்
அல்லும் பகலும் நவரத முந்ததித்தாற்
கல்லுஞ் சொல்லாதோ கவி.




வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடியுணர்தே
ஓதும் வேதத்தின் உள்நின்றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்


நன்றி

 
 
   

www.nakarmanal.com