|
இந்து மதம்
இது எப்போது ஆரம்பித்தது என்று
யாருக்கும் தெரியாது. இந்து மதத்தின் முக்கிய நூலான நால்வேதங்கள் 5000 ஆண்டுகள்
பழமையானவை. சிந்து நதிக்கரை நாகரீக நகரங்களான மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் சிவலிங்கம்,
தட்சிணாமூர்த்தி போன்ற இந்து மதக் கடவுள்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நாகரீகம் 7000 ஆண்டுகள் பழமையானது. இந்து மதத்திற்கென்று தனி ஸ்தாபகர்
கிடையாது. இறைவனை தங்களிற்குள்ளேயே உணர்ந்த மகரி~pகள் - சித்தர்களின் கூட்டமே
தங்களின் அனுபவத்தை வெளியிட்டனர். இதுவே பிற்காலத்தில் இறைவனை அறிவதற்கும்,
அடைவதற்கும் ஒரு பாதையாக, ஒரு மார்க்கமாக, ஒரு சமயமாக மாறியது.
வெளியிலிருந்து இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் இங்கு உருவ வழிபாடும், ஆயிரக்
கணக்கான தெய்வங்களும் உள்ள ஒரு குழப்பமான சமயம் இது என்றே கூறுகின்றனர். இந்த
விமர்சகர்கள் ஒரு விடயத்தை கவனிக்க தவறிவிட்டனர். குழப்பமற்ற தன்மையும், சரியான
வழிகாட்டுதலும் இல்லையென்றால் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரு மதம் பலரினால்
கடைப்பிடிக்கப்பட்டு வருமா? என்பதனை இந்த விமர்சகர்கள் ஆராய்ந்து பார்க்க
தவறிவிட்டனர். மேலெழுந்த வாரியாக, பாமரத்தனமாக விமசிப்பவர்கள் மிகவும் ஆழமாக
சென்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் ஒருவரே, அவரே பரப்பிரம்மம் ஆவார்.
கோவில்களிலும் மற்ற இடங்களிலும் நாம் பார்க்கும் பல தெய்வங்களின் வடிவங்கள்
பரப்பிரமத்தின் தொழில்களிற் கேற்ப அல்லது செயல்களிற்கேற்ப எடுக்கப்பட்ட
வடிவங்களே ஆகும். இந்து மதம் பல தெய்வங்களை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடும்
ஒரு மதம் அல்ல. மாற்றாக முழுமுதற் கடவுள் ஒருவரே என்று கூறி வழிபடும் ஒரு மதமே
இந்து மதமாகும். இந்த முழுமுதற் கடவுளே ஒப்புயர்வற்ற, உருவமற்ற, எல்லையில்லா
சக்திகளைக் கொண்ட பரப்பிரம்மம் ஆவார். மற்றைய தெய்வங்கள் எல்லாம் தனது
தோற்றத்தின் செயல்களிற்காக அந்த பரப்பிரமத்தின் ஒரு அல்லது பல குணங்களை,
பண்புகளை கொண்ட ஒரு அடையாள பிரதிநிதிகளே ஆவர்.
இந்த உலகில் வாழும் நம் மனங்கள் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. பல
குழப்பமான எண்ணங்களினால் அடிக்கடி நிலை மாறிக் கொண்டேயிருக்கிறது. இதற்க காரணம்
பூர்வ ஜென்ம கர்மா - புர்வ ஜென்ம வாசைன என்று கூறப்படும் முற்பிறப்புகளில் நாம்
செய்த பாவ புண்ணியங்களின் பிரதிபலிப்பேயாகும். இதனால் இப்பிறப்பில் நமது மனம்
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, பதவியாசை, புகழ் ஆசை என்ற பல மாயவலைகளில்
சிக்கித் தவிக்கிறது. இப்படிப்பட்ட பல குழப்பமான ஆசைகளில் சிக்கித் தவிப்பதனால்
நமது மனம் ஆழ்ந்து சிந்திக்கவோ, ஒருமுகப்படவோ, தியானிக்கவோ முடியாமல் போகிறது.
இதனால் இறைவனை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது. அதாவது நமது மனம் உலக
விசயங்களிலேயே ஆழ்ந்து கிடக்கிறது.
இதனைப் புரிந்து கொண்ட மகரி~pகளும, சித்தர்களும் அன்றாட வாழ்க்கையுடன் தெய்வ
வழிபாட்டையும் இணைத்தால் தான் மக்கள் தெய்வ வழிபாட்டினை கடைப்பிடித்து உயர்வடைய
முடியும் என்று கருதி பலவகை தெய்வங்களை உருவாக்கி அவறிற்கு விழாக்கள்
உற்சவங்கள் எனவும் சமயச் சடங்குகள் எனவும் நமது வாழ்க்கையுடன் பின்னிய சில
கடமைகளை ஏற்படுத்தினர். இதனால் இறைவழிபாடும் அதனால் இறைநினைப்பும் நமது அன்றாட
வாழ்வின் ஒரு அங்கமாக, ஒரு செயலாக நமக்குள் நம்மை அறியாமல் வந்து விடுகிறது.
நன்றி
|