|
பணத்திற்க்காக என்றும்
வாழாமல் எமது வாழ்க்கைக்கு பணம் தேவை என்று வாழ்ந்தால் எமது
வாழ்க்கை பயனுள்ளதாகும்.
ஏமாற்றம்
அறிவாற்றும்: நாம் மற்றவர்களிடம் ஏமற்றம் அடையும்போதுதான் எமக்கு
அறிவும் ஆற்றலும் அதிகமாகும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு
கணத்தையும் முழுக்க முழுக்க பயனுள்ளதாக்க நாம் முயற்சிக்க
வேண்டும்.
வாழ்வில் விட்டுக்கொடுத்தவர்கள்
கெட்டுப்போனதுமில்லை. கெட்டுப்போனவர்கள்
விட்டுக்கொடுத்ததுமில்லை.
மனிதனின் வாழ்க்கை
பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாகவே என்றும் இருக்கவேண்டும்.
ஒரு நல்ல நூல் ஒரு
நல்ல மனிதனுக்கு ஒரு நல்ல சொத்தாகும்.
ஒருவனுக்கு
அறிவிருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவனின் வாழ்வு சிறப்படையாது.
நீபேசும்
வார்த்தைகளின்மீது உனக்கு என்று கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
நாம் எப்போதுமே
வாழ்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் வாழ்வதில்லை.
தீமைகளை
குறைத்துக்கொள், நண்மைகளை அதிகப்படுத்திக்கொள், அதற்காக மட்டுமே
என்றும் பாடுபடு.
நம்பிக்கை
உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிகொண்டு முன்னேறுகிறார்கள்.
கல்வியின் பயன்
எதையும் கோபப்பட்டாமலுல் தன் நம்பிக்கை இளக்காமலும் செவி
சாய்க்கும் திறன் உடயதாகும்.
உன்னைத்தவிர உமக்கு
வேறு எவரேனும் அமைதியை தந்துவ முடியாது.
கட்டாயப்படுத்தி
புகுத்தப்படும் அறிவு மனதில் என்றும் பதியப்படமாட்டாது.
காலத்தில் செய்வதை
தள்ளிப்போட வேண்டாம் தாமதத்தால் தீய முடிவுகள் உண்டாகும்.
நேற்று அசாத்தியமாய்
இருந்தது இன்று சாத்தியமாகும் அற்புதத்தினை நாம் ஒவ்வொரு நாளும்
பார்த்துவருகின்றோம்.
துயரத்திற்கு
ஒரேமருந்து சாதனைதான்.
அசுத்தங்களுள் மிக
மிக மோசமானது கோபங் கொள்வதுவேதான்.
மனதை பொத்தல்
குடிசையாக வைத்திராமல் எந்தபுயலையும் தாங்கும் இரும்புக்
கோட்டையாக வைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
நம்பிக்கை இல்லாத
இடத்தில் முயற்சிகளும் ஒருபோதும் இருக்க முடியாது.
அவசரப்படுபவர்கள்
தங்களை மட்டுமல்லாமல் சுற்றியுள்ளவர்களையும் அழித்துவிடுவார்கள்.
கோபம் என்னும்
அமிலம் எறியப்படுமிடத்தைவிட அதை வைத்துக்கொண்டிருக்கும் கலத்தையே
பெரிதும் நாசப்படுத்திவிடும்.
காற்றாடி காற்றை
எதிர்த்தே உயரச்செல்கிறது காற்றுடன் அல்ல.
உண்மையிடம்
அடைக்கலம் தேடுபவர்கள் உலகில் பலத்தோடும் சுகத்தோடும்
வாழ்கின்றார்கள்.
இறைவனின்
தரிசனத்துக்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே
புகலிடமாகும்.
உலகம் எவ்வளவு
பெரியதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்த விரிவாக்குங்கள்.
இடர்களைக்கண்டு
அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கு வளியாகும்.
அன்புள்ள
இடத்தில்தான் ஆண்டவன் என்றும் நிலைகொண்டிருப்பான்.
என்றாவது நான்
ஆசிரியை ஆனால் அது கல்வி போதிக்கமட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும்
இருக்கும்.
பெருந்தன்மையான
குணம் எல்லா நற்குணங்களிற்கும் ஆபரணம் போன்றது.
அள்ளிவழங்கும்
செல்வத்தவருக்கும், இயன்றதை கொடுக்கும் ஏழையும் சமமானவர்களே.
மனிதன்
சுதந்திரமாகச் செயல்படுவதை காட்டிலும்,மற்றவர்களை சார்ந்தே
வாழ்கிறான்.
எல்லோரும் ஒன்றாக
சிந்திக்கும் போது ஒருவரும் நன்றாக சிந்திப்பதில்லை.
சமுதாயத்தின்
எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.
உலகில் மிகச்சிறந்த
மக்கள் எப்போழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
உளைக்கவும் அதன்பின்
விளைவுக்காக காத்திருக்கவும் கற்றுக்கொள்.
நம்மை நாம்
அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன.
நேரத்தை
தள்ளிப்போடாதே தாமதத்தினால் அபாயமுடிவே உண்டாகும்.
தொடரும்>>> |