Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Contact

 

 

   
 
  Users online ::

           

           நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் அற்புதங்களில் பல உள்ளது. அவற்றில் மிகவும் சிறந்ததுவும் ஆனால் உண்மையானதுமான இவ் அற்புதத்தினை எமது கிராம மக்கள்,  அயல்கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் இந்த அற்புதத்தினை அறிவார்கள். இந்த அற்புதம் என்னவென்றால்?  இக்கிராமக்களிற்கு அரவமோ அல்லது வேறு ஏதாவது விஷமுடைய பிராணிகள் தீண்டினால் மருத்துவமனைகளை நாடுவதில்லை. உடனே எமது கிராம மக்கள் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு சென்று எமதுபாரம்பரிய தெய்வமான நாகதம்பிரானிடத்தில் முறையிடுவார்கள். எம்கிராமத்து நாகதம்பிரானே விஷம்தீண்டிய பக்தர்களை காத்து அருள்வார். இது எமது கிராம மக்களுக்கு மட்டுமன்றி அயல்கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொள்வார்கள். அதன் விபரம்மும் அதிசயமும்.

              நாகர்கோவில் கிராமம் மற்றும் அதை அண்டிய அயல் கிராம மக்களிற்க்கு விஷம் தீண்டினால் அவர்கள் உடனடியாக எமது ஆலயத்திற்கு கொண்டு செல்வார்கள். ஒரு வைத்தியசாலைக்கு ஒரு நோயாளி சென்று வைத்தியரிடம் எனக்கு இந்தமாதிரியான வருத்தம் என்று சொன்னால்தான் அந்த வைத்தியருக்கு தெரியும் எந்த விதமான நோய் என்று. ஆனால் எமதுகிராமத்தில் அமைந்த நாகதம்பிரான் அலயத்தில் உள்ள பூஜகர் அவருக்கு விஷம்தீண்டி பக்த்தர்கள் வருமுன்னரே அவர் அறியக்கூடியவராவார். அதனால் இவ் ஆலய பூஜகர் பக்தர்களை எதிர்பார்த்துக்காத்து கொண்டிருந்து ஒரு அன்னை எப்படி தனது பிள்ளைகளை அரவனைத்து கொள்வாளோ...! அதேபோல் எமது கிராமத்து ஆலய பூஜகரான பூஜகரும் விஷம்தீண்டி வரும் மக்களுக்கு அன்னைதான். "இக்கிராமத்தைக்காக்கும் அன்னை" இப்பூஜகருக்கு எப்படி அறியக்கூடியதாக உள்ளது என்று உங்களுக்கு சந்தேகமாகத்தான் இருக்கும் ஆனால் உண்மை.அதன் விபரம்..

             பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் மூலஸ்த்தானத்தில் சிவலிங்கத்தோடு ஒரு பாம்புப்புற்றும் உள்ளது. இவ் ஆலயத்தில் பூஜை முடிவடைந்ததும் பூஜகர் பால்பழம் எடுத்துசென்று பெரும் பக்த்தியுடன் மூலஸ்தானத்தில் உள்ள பாம்புப்புற்றுக்கு படைப்பார் ஆதிமூலமான ஆலயத்து நாகபாம்பு தனாகமேலேவந்து அப்பால்பழத்தை குடித்துவிட்டு திரும்பிப்புற்றுக்குள்ளே சென்றுவிடும். இம் மூலஸ்தானத்தில் குடிகொண்டிருக்கும் எமதுகிராமத்து காவற்கடவுளாகிய ஆலயத்து நாகபாம்பு புற்றிலிருந்துவெளியேவரும்போது ஒருபிடி புற்றுமண் (இக்கிராம மக்களால் இம்மண்ணை நாமம் என அழைப்பார்கள்) எடுத்துவந்து புற்றுவாசலாகிய மூலஸ்தானத்தில் வத்துவிட்டு மீண்டும் புற்றுக்குள்ளே திரும்பிவிடும். அந்தசந்தர்ப்பத்தில் இப்பூஜகர் உள்ளே செல்லும்போது பூஜகரால் இதைக்கண்டதும் இவரால் அறியக்கூடியதாவது என்னவென்றால்? இன்று இக்கிராம மக்களோ அல்லது வேறுகிராம பக்த்தர்களோ எம்மிடம் வருவார்கள் என அறிந்துகொண்டு இப்பூஜகராகிய இவர் எதிர்பார்த்தவண்ணம் காத்திருப்பார்.

        விஷம் தீண்டிய பக்தர்கள் வந்ததும் இப்பூஜகர் கோயிற்ப்பாம்பு குடுத்த மருந்தாகிய புற்றுமண்ணை எடுத்துவந்து ஆலயத்தீர்த்தத்தில் கரைத்து விஷம் தீண்டிய இடத்தில் பூசியும் அதைபருகவும் கொடுப்பார். பின்னர் விஷம் தீண்டிய பக்தர்களை இப்பூஜகர் தனது பிள்ளைகள்போல் கருதி பூரணகுணமடையும்வரை ஆலயத்து வளாகத்தில் அமைந்திருக்கும் ஆச்சிரமத்தில் (அன்னதானமடத்தில்) தங்கவைத்து அப்பக்தர்களுக்கு உணவளித்து பாதுகாத்துக்கொள்வார். இதன்காரணமாகவே இக்கிராமத்து பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்து பூஜகரை இக்கிராம மக்கள் தெய்வமாகவே கருதிக்கொள்வதுடன் தகுந்தமரியாதைகளையும் கொடுப்பார்கள்.

      பலநூற்றாண்டுகாலத்திலிருந்து 1999ஆம் ஆண்டுவரை இவ்வூரில் எவரேனும் விஷம்தீண்டி இறந்ததாக சரித்திரமில்லை. அத்தோடு அயல்கிராமங்களில் இருந்தும் விஷம்தீண்டிய மக்கள் நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தைத்தேடி தஞ்சமென்றுவந்தவர்கள்கூட இதுவரையில் யாரேனும் இக்கிராமத்தின் காவற்தெய்வமான பூர்வீகநாகதம்பிரான் பக்த்தர்களை கைவிட்டதாக இல்லை. அத்தகைய சரித்திரம் வாய்ந்த சக்தியுடையது நாகர்கோவில் நாகதம்பிரான்.

     நான் தெரிந்துகொண்டவரையில் சுமார் 40பது ஆண்டு காலத்தில் இதுவரையில் இக்கிராமத்தைச்சேர்ந்த இரண்டு கிராமவாசிகள் அரவம்தீண்டி இறந்தார்கள். அவரகளில் ஒருவர் தியாகராசா என்பவரின் தவப்புதல்வி கமலம்,  ஏறத்தாழ 1970ஆம் ஆண்டு. காட்டில் விறகு விறகுசேகரிக்க சென்றபோது அரவம் தீண்டி இறந்ததாக நாம் அறிந்த உண்மை. இரண்டாவதாக அரவம்தீண்டி இறந்தவர் திரு அழகன் என்பவரின் அன்புமகன் அருணகிரி. ஆனால்........! இவர் இக்கிராமத்தில் இல்லை. 1995ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முன்னேற்ற நடவடிக்கையால் இக்கிராமத்து மக்கள் இடம்பெயர்ந்து வன்னிமாவட்டத்திற்கு இடம்பெயர நேரிட்டன. அச்சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் வசித்துவந்த இக்கிராமத்தைச்சேர்ந்த அழகன் என்பவரின் செல்வப்புதல்வன் அருணகிரி என்ற சிறுவன். இவரது இல்லத்திற்கு பின்புறமாக இருக்கும் "நாயுண்ணி" என்று அழைக்கப்படும் மரத்தினை சுத்தம் செய்யும்போது அச்செடிகளுக்குள் மறைந்திருந்த அரவம்தீண்டியதால் இவர் பெற்றோர் அவசரமாக புதுக்குடியிருப்பு அரசவைத்தியசாலைக்கு கொண்டுசென்றார்கள் அவ்வைத்தியசாலையின் வைத்தியம் பயனளிக்காதுபோக சிலமணிநேரத்திற்குபின்  நாகர்கோவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அருணகிரி என்ற சிறுவன் இறந்தார். நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த இரண்டாவது தடவையாக விஷம்தீண்டி இறந்தது இதுவேயாகும். ஆனால் இச்சம்பவம் நாகர்கோவில் என அழைக்கப்படும் எமதுகிராமத்தில் நடந்திருந்தால் கட்டாயமாக இச்சிறுவன் எம்பெருமானின் திருவருளால்  உயிர்பிளைத்திருப்பார் என்பது நிச்சயமாக உண்மை."இவர்களுக்காக இக்கிராம மக்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்"

          இக்கிராமத்தில் உள்ள பூர்வீகநாகதம்பிரானின் மகிமை உண்மையா??????????? என்கின்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். இது உண்மைதான் உண்மைதான். காரணம் நாகர்மணல்.கொம் என்னும் இவ் இணையத்தளத்திற்கு இப்பூர்வீகநாகதம்பிரானின் அபூர்வத்தை எழுதியனுப்பும் இக்கிராம வாசியாகிய நானுன் 1999ஆம் ஆண்டு வைகாசி மாதம் எமது கிராமத்தில் வசித்த வேளையில் எனதுகாலில் இறந்த பாம்பின் எலும்பு (முள்) குற்றியதால் நான்  எனது இல்லத்தில் சிறுவைத்தியம் செய்து பயனளிக்காததால் சந்தேகத்தில் சிறிது தாமதமாக இப்பூர்வீக நாகதம்பிரனை நாடியபோது பூஜகர் என்னைப்பார்த்துக்கேட்டார் "நீங்கள் சிலநாட்களுக்கு முன்னர் வரவேண்டியநீங்கள் ஏன் தாமதமாக வருகிறீர்கள்"? என்று கேட்டபோது எனக்கு ஒருகணம் மெய்சிலிர்த்து உடனே பூஜகரின் காலில் முதல் விழவேண்டும் போலிருந்தது. அதன் பின் சுமார் ஒருமாதகாலம் வரை பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்து மூலஸ்தனத்து நாகம் புற்றிலிருந்து எடுத்துவந்த புற்றுமண்ணை (நாமம்)  இக்கிராமத்தின் அதிவிஷேசமான விஷகடி மருந்தாக உட்க்கொண்டு பூரணகுணமடைந்தேன். இதை நான் கூறியதன் காரனம்:: இக்கிராமத்தின் காவற்த்தெய்வமான நாகதம்பிரானின் அற்புதத்தினை படிப்பவர்களாகிய நீங்கள் நம்புவதற்கு எனக்கு நடந்த அந்தச் சம்பவமே உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

நன்றி.

 

   

www.nakarmanal.com