Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Contact

 

 

  Users online ::
 

               நாகர்கோவில் கிராமத்தின் பாரம்பரிய தெய்வமான நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த உற்சவம் பத்து தினங்களில் பத்து விதமான பழைமைவாய்ந்த பாரம்பரிய முறைகளையே பூஜையாக வழிபடுவது வளக்கமாயிற்று. அத்தகைய திருவிழாக்களில் 7ம் திருவிழாவான கப்பல் திருவிழாவின் விரிவான கூற்றும் அதன் பாரம்பரிய வரலாறும் இங்கே எம்மால் ஒரு சிறிய குறிப்பாக தொகுக்கப்பட்டுள்ளன.

      பலநூற்றாண்டுகாலத்திற்கு முன்னர் வெள்ளையரின் ஆட்சிகாலத்திலே! வெள்ளையர்களால் வட இலங்கை மக்களை கப்பலில் கடத்திச்சென்ற தமது நாட்டுக்கு கொண்டுசென்ற வேளையிலே.....! நாகர்ககோவில் கிராம எல்லையில் உள்ள இந்துசமுத்திர கடலில் அக்கப்பல் நகர்ந்த வேளையில் புயற்காற்றும், கடற்கொந்தழிப்பும் உண்டாகியபோது கப்பல் தத்தளித்து ஒரு பக்கமும் நகராத வேளையில் அக்கப்பலில் இருந்த சிறுமி ஒருவர் உன்மந்தனாகி (பக்திகலைகொண்டு)  அக்கப்பலில் இருக்கும் வெள்ளையர்களைப் பார்த்து "என்பதி குஞ்சுகளை தரையில் கொண்டுபோய் இறக்கி விட்டால் மட்டுமே இக்கப்பல் நகரும்" என வாக்கு கூறப்பட்டபோது வெள்ளையர்கள் அச்சம் கொண்டு உடனே அக்கப்பல் நாகர்கோவில் ஆகிய இக்கிராமத்தின் எல்லையிலுள்ள கடற்கரையில் இறக்கிவிடப்பட்டன. அனைத்து மக்களும் அக்கப்பலை விட்டு இறங்கியபோதும் அக்கப்பல் நகரவேயில்லை அந்தவேளையில் உன்மந்தனாகிய சிறுமி மீண்டும் ஆவேசமாகியவாறு வாக்கு கூறப்பட்டன உள்ளே ஒரு குழந்தையும், ஒரு பூனைக்குட்டியும் இருக்கின்றது என்று அந்தசமயம் அனைவரது கணகளுக்கும் காட்சி கொடுக்கப்பட்டன அதிசயம் ஆனால் உண்மைதான் என்னவென்றாஅல் அக்கப்பல் பாய்மரத்தில் ஒரு நாக பாம்பு இருந்தது ஆனால் அது அக்கப்பலை விட்டு இறங்கவேயில்லை அனைத்து மக்களையும் கப்பலை விட்டு இறாக்கியபின்புதான் அந்தப்பாம்பும் அக்கப்பலை விட்டு தானாகவே இறங்கியது.

           இவ் வரலாற்றினை சுருக்கமாகவும் பாரம்பரியமாகவும் வருடாந்த உற்சவமான கப்பல் திருவிழா என்று கூறாப்படும் திருவிழாவில் இக்கிராம மக்கள் பலவகையான வேடங்கள் அணிந்து  பல சிறுவர்களையும் சேர்த்து இக்கப்பல் திருவிழா அனைத்து மக்களுக்கும் பெரியோர்களில் இருந்து சிறுவர்கள் வரைக்கும் இக்கதைச்சுருக்கத்தினை வெளிப்படுத்துவார்கள். இக்கப்பல் திருவிழாவை சிறாப்பிப்பதற்கும் அதை பார்த்து மகிழ்வதற்கும் அனைத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் பலபல் இன்னல்களுக்கு மத்தியில் வந்து பார்த்து செல்வார்கள். இத்திருவிழாவிற்குரிய கப்பல் ஒன்று அழகான வர்ணங்களுடன் அலங்கரித்து இக்கிராம பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு காணிக்கையாக கொடுத்துதவியவர்கள் யாழ்மாவட்டத்தில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை கிராமத்தவரால் இக்கப்பல் காணிக்கையாக வழங்கப்பட்டது.

        இக்கிராமத்தில் அமர்ந்த பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு மேலும் பலபல வகையான பாம்பு சிலைகள், பலதளபாடங்கள் என்று வெவ்வேறு கிராம மக்களால் காணிக்கயாக வழங்கப்படன. இவ் ஆலயத்தின் அபூர்வங்கள் பல உள்ளன அவையாவும் மிகமிக விரைவில் இவ் இணையத்தளத்தில் எழுத்துவடிவமாக பார்வையிடுவதற்கான ஒழுங்குகள் செய்தவண்ணம் உள்ளன. நேயர்கள் பார்த்து உங்களது கருத்துக்களை எமது இணையம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ எமக்கு தெரியப்படுத்துங்கள்.

நன்றி

 

   

www.nakarmanal.com