|
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு அண்மையில்
1967ஆம் ஆண்டு இவ்
நெசவுசாலை ஆரம்பிக்கப்பட்டது. இவ்நெசவுசாலை
ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம்..... எமது கிராமமுன்னேற்றத்திற்க்காகவும்,
சங்கங்களின் வேண்டுகோளுக்காகவும் அரசாங்கத்தினால் இந்த நெசவுசாலை
ஆரம்பிக்கப்பட்டது. இந்த நெசவுசாலைய ஆசிரியராக இருந்து பணியாற்றிய பெரியார்
வராத்துப்பளையை பிறப்பிடமாகக்கொண்ட
திரு
சின்னான் நடேசன்
என்பவரே ஆவர். இவ்
நெசவுசாலையில் வேலைபுரியும் ஊளியர்களாக இக்கிராமத்தில் மிகவும் வறுமைப்பட்ட
குடும்பங்களில் இருந்து 25 பெண்களை இவர் தெரிவுசெய்துகொண்டு அவர்களுக்கு
வேலைவாய்ப்பைக் கொடுத்துதவினார்.
இந்த நெசவுசாலை அமைக்கப்பட்ட இடம்
பூர்வீகநாகதம்பிரான்
ஆலயத்திற்கும்,
கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் மத்தியில் அரசாங்கத்திற்கு
சொந்தமான எல்லையிலேயே இது நிறுவப்பட்டது. இவ் நெசவுசாலை ஆரம்பிக்கும்
பொருட்டு
திரு சின்னான் நடேசன்
என்பவரால் சிலதொகையான துணிகளை செய்துதரும்படி
இப்பணிப்பெண்களிடம் கூறி. இதுவே உங்களது முன்னேற்றத்திற்கு முதற்படியாகவும்
அமையும் என்று. இக்கிராமத்துமக்களில் தெரிவுசெய்யப்பட்ட பெண்களிடம் இவர்கூறி
வாழ்த்தினார். அந்தவேளையில் இந்த நெசவுசாலையில் உள்ளதளபாடங்களாக, 6
தறியும் அதற்காகிய தளபாடங்களும், திரு சின்னான் நடேசன் ஆகிய ஆசிரியரால்
குறிப்பிடப்பட்ட துணிகளுக்குரிய இளைநூல்களும் வழங்கப்பட்டது. அந்தவேளையில்
இவ் ஆசிரியரால் கூறப்பட்டது. "6மாத கலத்திற்குள் இத்துணிகளை நீங்கள்
செய்துமுடிக்கவேண்டும்" என்று. அந்த கட்டளையை பொன்மொழியாக ஏற்றுக்கொண்டு
அனைவரும் பெரும் சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் பணியாற்றினார்கள். அதன்
பயனாகவும் எம்பெருமனாகிய
பூர்வீகநாகதம்பிரான் கிருபையாலும் 6
மாதகாலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவேண்டிய துணிகளை 3மாதகாலத்தில்
முடித்துக்கொடுத்து
திரு சின்னான் நடேசன்
என்ற ஆசிரியரை வியக்க வைத்தார்கள்.
ஆச்சரியப்பட்ட
திரு சின்னான் நடேசன்
என்னும் ஆசிரியர்
அவர்கூறிய 6 மாத காலத்து ஊதியத்தை (சம்பளப்பணம்) அவர் முறைதவறாமல் தபால்
அலுவலகத்தில் மாதம் மாதம் மணிஆடர் மூலம் அனுப்பிவைத்து உதவினார். அத்தோடு
அவர் ஒரு நெசவுசாலை ஆசிரியர் என்பதால் அவர்குறிப்பிட்ட துணிகளை நெய்வதற்கு
எவ்வளவு இளைநூல்கள் தெவைப்படும் என்பது அவருக்கு தெரிந்தவிடையம் ஆனால்
ஆச்சரியம் என்னவென்றால்? இவரால் குறிப்பிடப்பட்ட துணிகளை நெய்துகொடுத்தும்
இளைநூல்கள் மிகுதியாகவும் இருந்ததைக்கணடு மிகவும் சந்தோஷமடைந்த இவ் ஆசிரியர்
மேலும் கூறினார். இந்த எஞ்சிய இளைநூலில் 25 சாறிகளும் உங்களால் நெய்யமுடியும்
என்று. காரணம் நான்கூறாப்பட்ட காலத்திற்கு என்னும் 6மாதங்கள் இருக்கின்றன
என்று. உடனே இவ்நெசவுசாலையில் வேலைபுரியும் ஊளியர்கள் அனைவரும் மீண்டும்
இப்பணியைதொடர்ந்து செய்தார்கள். இவர்களின்
சுறுசுறுப்பிற்கும், ஆசிரியரின் முயற்ச்சிக்கும் கிடைத்தபயனாக இந்தசேலைகளுடன்
இந்த நெசவுசாலை தொடர்ந்து செயற்ப்படுத்தக்கூடியதாக அமைந்தது.
இதன் பின்னர் 30 அடி உடைய கட்டிடமாக
இருந்த இந்தநெசவுசாலை. இன்னும் ஒருமடங்கு பெரிதாக்கி அமைக்கப்பட்டும்,
ஊளியர்களையும் அதிகப்படுத்தி, தளபாடங்களாகிய தறிகளையும் கூடுதலாக
கொள்வனவு செய்து இக்கிராமத்து நெசவுசாலையினை சற்று முன்னேற்றத்திற்கு
கொணர்ந்தார்கள். ஆரம்பகாலத்தில் கைகளினால் வாப்பு ஓட்டினார்கள்.
முன்னேற்றத்திற்க்கு பின்னர் வல்லை மின்சாரத்தினால் இயங்கும் நெசவுசாலையில்
இளைநூல்களைக்கொடுது வீம் செய்துகொண்டு வந்தார்கள் அப்படி வளர்ச்சியுற்று.
பின் நன்கு பயிற்ச்சி பெற்ற்வர்கள்.தங்கள் வீடுகளிலும் தறிகளை வைத்து வேலை
செய்துவந்தார்கள்.
அதன் பின்பு 1983ஆம் ஆண்டு இன்வாதக்
கலவரம் மூணடது. அது தொடர்ந்துகொண்டே வந்ததால் 1986ஆம் ஆண்டு இந்திய
இராணுவத்தின் ஷெல் வீழ்ந்து வெடித்ததால் இக்கட்டிடம் சிறிதுசேதாரம்
ஏற்ப்பட்டது. பின்னர் அக்கட்டிடம் இக்கிராமத்தை வந்தடைந்த இந்திய
இராணுவப்படையினர்களால் சிதைக்கப்பட்டு பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்திற்கு
முன்பாக ஒரு கவலரன் அமைக்கப்பட இவர்களுக்கு உதவியாகியது இந்த கிராமத்தின்
பழமைவாய்ந்த நெசவுசாலை. இக்கலவரம் ஆரம்பித்ததில் இருந்து இக்கிராம மக்கள் பல
இன்னல்களுக்கு மத்தியிலும் சொல்லொணாத்துயரங்களுடனும் வாழ்ந்து வந்தார்கள்.
தற்பொழுது இக்கிராமம் இலங்கை
இராணுவத்தின் முக்கியகேந்திரம் வய்ந்த தளமாக மாறியுள்ளது.
நன்றி
|