வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 
 
 

 

 

 

 

  Users online ::

                                                 யாழ்ப்பாணம் நாகர்கோவில் கிராமத்தச்சொந்த முகவரியாகவும், திருச்சியை (இந்தியா) தனது தற்காலிக முகவரியாகவும் கொண்ட அமரர் செல்வன் சுந்தரலிங்ம் சண்முகராசா 05.04.2006  அன்று காலமானார்.

                                                   அமரர் செல்வன் சண்முகராச சுந்தரலிங்கம் தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புமகனும், சிவகணேசன், சுதர்சனன், வாசுகி, அமரத்துவமடைந்த சக்திவேல் இவர்களின்அன்புச்சகோதரனும் ஆவார்.இவரின் திருவுடல் 06.04/2006 அன்று சகல கிரியைகளுடன் இந்தியா இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இத்தகவலினை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராமத்தவர்களுக்கு அறியத்தருகின்றார்கள்.

 

எங்கள் அரும் பெரும் செல்வமே சண்முகராசாவே...!

எம் குடும்பத்தில் பஞ்சகேத்திரனாகத் தோன்றி

ஒளிவிளக்காக ஒளி வேசிய எம்திருவுருவே...!

நாம் மிகுந்த அன்பு பாசம் காட்டி

அரவணைத்து வந்தோமே!

ஆசை வார்த்தை கூறி எம்மையெல்லாம்

அன்பு வெள்ளத்தில் ஆழ்த்திய எம் செல்வமே....!

பல ஆண்டுகள் சென்றபின் போலியோ என்னும்

கொடுநோய் உம்மை முடக்கியது.

அதுகண்டு நாம் கவலைக்கடலில் ஆழ்ந்தோமே...!

உமது வருத்தத்தை மாத்துவதற்க்கென

இலங்கையில் இருந்து இந்தியா வந்தும்

வருத்தம் நீங்காது நிற்கும் நாளிலே..!

««««««««««««««««««««««««««»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»

           2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதன் கிழமை 5ஆம் திகதி பூர்வ பக்க சப்தமி திதி அன்று உமது ஆண்மாவை கெடுகாலன் கொண்டு சென்றானே....

         உமது பூதவுடல் அழிந்தாலும் நல்லுயிர் ஆனது என்றும் அழியாது எங்கள் ஆசைமகனே... உமது அழகு வார்த்தையும் அரும்பெரும் ஆசை வார்த்தைகளையும் இனி நாம் கேட்ப்பது எங்கே? காண்பது எங்கே? இதனால் துயருறும் ஐயா அம்மா, மற்றும் அண்ணாமார்கள், அக்காமார்கள், தங்கைமார்கள் உமது பாதாரவிந்தைகளுக்கு எமது சோகத்தினை கண்ணீரினால் வரைந்து அனைத்துமக்களுக்கும் அறியத்தருகின்றோம்

 

தகவல் குடும்பத்தினர்.


 

சுந்தரலிங்கம்      சிவகணேசன்           லண்டன்       0041 31 921 65 71

சுந்தரலிங்கம்     சுதர்சனன்           லண்டன்  

சுந்தரலிங்கம்     வாசுகி             லண்டன்

 

நாகர்மணல்.கொம் தனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியினைத் தெரிவிக்கின்றனர்.

UR.Admin - Nakarmanal.com


 

 Back<<

                                                                    www,nakarmanal.com