|
பாடல் |
வண்ணம்கொண்டவெண்ணிலவே |
|
பாடியவர |
எஸ்.பி.பாலசுப்ரமணியம் |
|
படம |
சிகரம் |
|
இசை |
|
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம்விட்டு வாறாயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டுவாறயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாறாயோ..
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
சரணம் 1
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாசையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாசையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கையில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம்விட்டு வாறாயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
சரணம் 2
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திர பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் ஆடுதடி
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திர பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் ஆடுதடி
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல் நான்கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டுவாறயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாறாயோ..
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
|