வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 
 

 
பாடல்  சின்னஞ்சிறு கிளியே  
பாடியவர  
படம  
இசை  

 

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி

சற்றுன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி

உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

சொல்லு மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்

இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ
அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ

மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகளுண்டோ
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ  
 


  Back<<