வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

பாடல்   இருக்கும் இடத்தை விட்டு
பாடியவர  சீர்காழி கோவிந்த ராஜன்
படம  திருவருட் செல்வன்
இசை  கே வி மஹாதேவன்

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே .... ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு...
பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே
அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

  Back<<