|
பாடல் |
அரச்ச
சந்தணம் மணக்கும் |
|
பாடியவர |
எஸ்.பி.
பாலசுப்ரமணியம் |
|
படம |
சின்னத்தம்பி |
|
இசை |
இசைஞானி
இளையராஜா |
குளுவுடன்.
லுலுலுலு......லுலுலுலு........லுலுலுலு............
செம்பவள முத்துக்கள
சேர்த்து வைத்த
சித்திரமே...
தங்கவள வைரவள
போட்டிருக்கும் முத்தினமே...
வாய்திறந்து
நீசிரிச்சா பார்த்திருக்கும் அத்தனையும்
நீவளர்ந்து பார்த்திருந்தா தோத்துவிடும் இத்தனையும்
லுலுலுலு......லுலுலுலு........லுலுலுலு............
பல்லவி
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு
நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதுப்போல் பல மாயங்கள்
தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
சரணம் 1
பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள்
தந்ததென்னஇது பூவோ பூந்தேரோ
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
சரணம் 2
மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெறம் அவ பொன்னெறம் அவ சிரிக்க நெனப்பு செதறும்
ஏலப்பூவு கோலம்போடும் ராணிதான்
பல ஜாலத்தோடு ஆடப்போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதுப்போல் பல மாயங்கள்
தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலில |