வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

பாடல்:: அமைதியான நதியினிலே ஓடும

பாடியவர்:: ரி.எம்.செளந்தர்ராஜன் பி.சுசீலா

படம்:: ஆண்டவன் கட்டளை

இசை:: எம்.எஸ்.விஸ்வநாதன்

டி.எம்.எஸ்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்

கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
தென் னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது

தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்.
ஓ ஓ ஓ
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது

காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது

நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தெளிந்துவிடும்

அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

இருவரும்

  Back<<