|
பாடல்::
ஆலய
மணியின் ஓசையை நான்
பாடியவர்::
பி.
சுசீலா
படம்::
பாலும்
பழமும
இசை::எம்.எஸ்.
விஸ்வநாதன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே என பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
சரணம்1
இளகும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுயென்றால் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
இறைவன் அவனே அவனே என பாடும்
மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
சரணம்2
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
இறைவன் அவனே அவனே என பாடும்
மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
|