Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home

நாகர்கோவில் வடக்கைசேர்ந்த அடியார் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு மின்பெயர் பலகை அன்பளிப்பு.

நாகர்கோவில் வடக்கை சேர்ந்த {லண்டன்}அரியரத்தினம் ஜெயக்குமார் எனும் பக்தர் 11.05.2019 அன்று நாகர்கோவில் அருள்மிகு கண்ணைகை அம்மன் ஆலயத்திற்கு மின்விளக்கிலான பெயர்பலகையினை அன்பளிப்பு செய்துள்ளார். இம்மின்பெயர் பலகையினை வேலுப்பிள்ளை அரியரத்தினம் மற்றும் ஏரம்பு செல்வராசா ஆகியோரினால் ஆலய பூசகரிடம் கையளிக்கப்பட்டது. இவ் அன்பளிப்பினை மேற்கொண்ட நாகர்கோவில் வட்டைக்கைச்சேர்ந்த அரியரத்தினம் ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு கண்ணகை அம்மன் நல்லருள்வழங்கவேண்டும் என வேண்டுகின்றனர்.

மேலும் புகைப்படங்களுக்கு >>>

Last Updated (Sunday, 12 May 2019 09:05)

 

புளியடிப்பிள்ளையார்ர் தேவஸ்தான சங்காபிசேகம் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று சிறப்பாக நடைபெறும்

வடமராட்சி கிழக்கு குடாரப்பு புளியடிப்பிள்ளையார்ர் தேவஸ்தான சங்காபிசேகம் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9 மணியளவில் எம்பெருமானுக்கு 108 சங்குகளால் ஆன அபிசேகம் ஆரம்பமாகி விசேட பூஜைகள் இடம்பெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும் இதனைத்தொடர்ந்த்து சிறப்பு நிகழ்வாக வர்ணம் இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சி பி.ப 1.00 மணியளவில் இடம்பெறும் . இக்கைங்கரிய தரிசனத்திற்கு பெரிந்திரளான அடியவர்கள் கலந்துசிறப்பித்து எம்பெருமானின் திருவருள்கடட்சத்தினை பெற்றேகுவீர்களாக .

Last Updated (Sunday, 21 April 2019 03:43)

 

புளியடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வடமராட்சி கிழக்கு குடாரப்பு புளியடிப்பிள்ளையார் தேவஸ்தான மகாகும்பாபிஷேகம் கடந்த 10.04.2019  புதன்கிழமை காலை 9 மணியளவில் சிறபான முறையில் நடைபெற்றது இக்கைங்கரிய தரிசனத்திற்கு பெரிந்திரளான அடியவர்கள் கலந்துசிறப்பித்து எம்பெருமானின் திருவருள்கடட்சத்தினை பெற்றேகினர்.

 

Last Updated (Friday, 12 April 2019 15:35)

மேலும்

 

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வரவு செலவு விபரங்கள்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற பீம ஏகாதசி மற்றும் சிவராத்திரி விழாக்களுக்கான வரவு செலவு கணக்கறிக்கை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இக்கணக்கறிக்கையில் தவறேதும் காணப்படின் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்புகொள்ளுமாறு மணிவோடு வேண்டுகின்றோம்.

Last Updated (Monday, 25 March 2019 03:00)

மேலும்>>

 

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேகப் பெருவிழா அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் விகாரி வருடம் ஆனி மாதம் 26ம்(11-07-2019) திகதி வியாழக்கிழமை  நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை உள்ளூர், புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

Last Updated (Monday, 25 March 2019 02:31)

மேலும்>>

 

அருள்மிகு புலாவியோடை நாகதம்பிரான் பீம ஏகாதசி

அருள்மிகு புலாவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 16.02.2019 சனிக்கிழமை அன்று பீம ஏகாதசி பூஜைகள் நடைபெற்று 17.02.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள‌ந்து கட்டப்பட்டு அடியவர்களால் பொங்கல் வைக்கப்பட்டு பூஜைகள் சிறப்புற நடைபெறும். எனவே மெய்யடியார்களே தங்களால் முடிந்த உதவிகளை எம்பெருமானுக்கு செய்து எம்பெருமானது திருவருளினை பெற்றுய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Last Updated (Monday, 11 February 2019 10:06)

 

புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.

நாகர்கோவில் மகாவித்தியாலய புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நினைவேந்தல் நினைவாக அவுஸ்திரேலியா கணன் ஹோம்ஸ் நிறுனத்தின் உரிமையாளரும், இக்கோரத்தாக்குதலில் அகாலமரணமான மயில்வாகனம் கணநாதன் அவர்களின் அண்ணனாகிய மயில்வாகனம் கெங்காசுதன் அவர்களால் 50 மாணவர்களுக்கு தலா 12000 ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இவ்வுதவியானது வருடா வருடம் உதவி அரசாங்க அதிபர் தலைமயில் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இம்மாணவச்செல்வங்களின் ஆத்மா சந்தியடைய எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தளம் அஞ்சலி செலுத்துகின்றது.  புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது>>

Last Updated (Sunday, 23 September 2018 01:52)

 

நாகதீபம் கலாமன்றத்தினரின் மாலைக்கு வாதடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து முள்ளிவாய்க்காலில்.

நாகர்கோவில் வடக்கு நாகதீபம் கலாமன்ற கலைஞர்களால் கட்ந்த புதன்கிழமை 15.308.2018 முள்ளிவாய்க்கால் காளியம்மன் ஆலயத்தில் மாலைக்கு வாதாடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து மிகுந்த பக்தியுடன் நடைபெற்றது. எமது கிராமத்தின் பாரம்பரிய விழுமியங்களை நிலைநாட்டி அனைவராலும் பாரட்டப்பட்டதுடன் இக்கலஞர்களை மென்மேலும் வளர்ச்சியடையவேண்டுமென்று எமது கிராம மக்கள் சார்பக நாகர்மணல் இணையத்தளம் வாழ்த்துகின்றது.

Last Updated (Tuesday, 21 August 2018 09:20)

 
Gallery
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
MiniCalendar
May 2019
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031